/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பஸ் கண்டக்டர் நெஞ்சு வலியால் பலி
/
அரசு பஸ் கண்டக்டர் நெஞ்சு வலியால் பலி
ADDED : ஆக 04, 2024 10:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி:திருவாரூர் மாவட்டம், நெடும்பாலத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன், 48, அரசு போக்குவரத்துக்கழக திருவாரூர் டிப்போ பஸ் கண்டக்டர். இவர் காஞ்சிபுரத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி சென்ற பஸ்சில் பணியில் இருந்தார். உடன், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன், 34, டிரைவராக இருந்தார்.
நள்ளிரவு 12:00 மணிக்கு, விக்கிரவாண்டி டோல்பிளாசா அருகே இரவு நேர ஹோட்டலில் டீ சாப்பிட இறங்கினர். அப்போது கண்டக்டர் சாமிநாதனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.
விக்கிரவாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.