/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போதையில் பஸ் ஓட்ட முயன்ற அரசு டிரைவர் சஸ்பெண்ட்
/
போதையில் பஸ் ஓட்ட முயன்ற அரசு டிரைவர் சஸ்பெண்ட்
ADDED : ஆக 08, 2024 12:27 AM
கள்ளக்குறிச்சி,:கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு, ஈரியூருக்கு செல்லும் அரசு டவுன் பஸ்சில் பயணியர் பலர் ஏறி காத்திருந்தனர். அப்போது, அக்கரபாளையத்தை சேர்ந்த டிரைவர் ராஜா, 45, என்பவர், குடிபோதையில் பஸ்சை ஓட்ட முயன்றார். அதை கண்ட பயணியர், அங்கிருந்த நேர காப்பாளர் அலுவலகத்திற்கு சென்று புகார் தெரிவித்தனர்.
உடன் அங்கு வந்த டிரைவர் ராஜா, புகார் தெரிவித்த பயணியரிடம் தகராறு செய்தார். எனினும், மாற்று டிரைவர் மூலம் பஸ் இயக்கப்பட்டது.
குடி போதையில் அரசு பஸ் டிரைவர் பயணிகளிடம் தகராறு செய்யும் வீடியோவை பார்த்த, விழுப்புரம் கோட்ட பொது மேலாளர் சதிஷ்குமார், டிரைவர் ராஜாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.