/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மொபட் மீது அரசு பஸ் மோதி விபத்து: சவுண்டு சர்வீஸ் உரிமையாளர் பலி
/
மொபட் மீது அரசு பஸ் மோதி விபத்து: சவுண்டு சர்வீஸ் உரிமையாளர் பலி
மொபட் மீது அரசு பஸ் மோதி விபத்து: சவுண்டு சர்வீஸ் உரிமையாளர் பலி
மொபட் மீது அரசு பஸ் மோதி விபத்து: சவுண்டு சர்வீஸ் உரிமையாளர் பலி
ADDED : ஏப் 18, 2024 11:26 PM

திண்டிவனம் : மொபட் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் சவுண்டு சர்வீஸ் உரிமையாளர் இறந்தார்.
திண்டிவனம் உதயம் நகரைச் சேர்ந்தவர் நந்தகுமார், 64; திண்டிவனம் ராஜாங்குளக்கரையில் சவுண்டு சர்வீஸ் கடை வைத்துள்ளார். இவர், நேற்று பிற்பகல் 1:30 மணியளவில், மொபட்டில் சந்தைமேடு புறவழிச்சாலையில் சலவாதி மார்க்கமாக சென்றார்.
எட்டியம்மன் கோவில் அருகே சென்றபோது, திருவண்ணாமலையிலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பஸ், மொபட் பின்னால் மோதியது.
இதில், படுகாயமடைந்த நந்தகுமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
புகாரின் பேரில் ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.