sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு விரைவு பஸ் விபத்து: டிரைவர் உட்பட 6 பேர் காயம்

/

அரசு விரைவு பஸ் விபத்து: டிரைவர் உட்பட 6 பேர் காயம்

அரசு விரைவு பஸ் விபத்து: டிரைவர் உட்பட 6 பேர் காயம்

அரசு விரைவு பஸ் விபத்து: டிரைவர் உட்பட 6 பேர் காயம்


ADDED : செப் 01, 2024 04:39 AM

Google News

ADDED : செப் 01, 2024 04:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே அரசு விரைவு பஸ் விபத்துக்குள்ளாகி டிரைவர் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.

சென்னை, புழுதிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர், 53; டிரைவர். இவர் நேற்று அரசு விரைவு பஸ்சில் 39 பயணிகளை ஏற்றிக்கொண்டு சித்துார் - கடலுார் வழியாக பெங்களூருலிருந்து - சிதம்பரம் நோக்கிச் சென்றார்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சரவணம்பாக்கம் கிராமம் அருகே நேற்று அதிகாலை 4:10 மணியளவில் சென்றபோது பஸ் நிலை தடுமாறி சாலையோரத்தில் உள்ள ராகவன் வாய்க்காலில் இறங்கியது.

அதில் டிரைவர் ராஜசேகர், பயணிகள் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் மதுசூதனன், கடலுார் மாவட்டம், அண்ணாநகர் பாரி, 34; உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்ற பயணிகள் மாற்று பஸ் மூலம் சிதம்பரம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us