/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில நிர்வாகிகள் செயற்குழு
/
பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில நிர்வாகிகள் செயற்குழு
பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில நிர்வாகிகள் செயற்குழு
பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில நிர்வாகிகள் செயற்குழு
ADDED : மார் 02, 2025 04:52 AM

விழுப்புரம் : தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் மாநில நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு, மாநில தலைவர் தங்கவேலு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அச்சுதன் வரவேற்றார். மாநில துணை பொதுச் செயலாளர் மணிகண்டன், ஊடக பிரிவு செயலாளர் சிவவேலன் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், தமிழாசிரியர் கழகம் மாநில பொருளாளர் கோவிந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாநில துணை பொறுப்பாளர்கள் விநாயகமூர்த்தி, பாலசுப்ரமணியன், லோகேஸ்வரன், அருண், அமுதா, செயற்குழு செந்தில்குமார், ராஜேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், அனைவருக்கும் பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், பள்ளிக்கல்வி துறைக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய 2,152 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு காலதாமதம் செய்யாமல் வழங்கிட வேண்டும்.
கடந்த 2004, 2005, 2006ம் ஆண்டுகளில் பணியேற்ற ஆசிரியர்களின் தொகுப்பூதிய பணி காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.