/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரங்க பூபதி கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
ரங்க பூபதி கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : ஆக 01, 2024 07:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி, ஸ்ரீரங்க சின்னம்மாள் கல்வியியல் கல்லுாரியில் 2020-2022ம் ஆண்டு பி.எட்., படித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லுாரி செயலாளர் ஸ்ரீபதி தலைமை தாங்கினார். இயக்குனர் சாந்தி பூபதி முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் கோவிந்தராஜ் வரவேற்றார். தாளாளர் ரங்கபூபதி மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசினார். செயல் இயக்குனர் சிவசங்கரன், கல்லுாரி முதல்வர்கள் சசிகுமார், செந்தில்குமார் வாழ்த்திப் பேசினர்.