ADDED : மார் 10, 2025 05:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: மகாராஜபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது.
விழுப்புரம், கிழக்கு பாண்டி ரோடு, மகாராஜபுரம் ஹவுசிங் போர்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் 7ம் ஆண்டு மயானக் கொள்ளை உற்சவம், கடந்த 7ம் தேதி காலை 10:00 மணிக்கு கொடியேற்றுடன் துவங்கியது. நேற்று மயானக் கொள்ளை நடந்தது.
அதனையொட்டி, காலை 11:00 மணிக்கு உற்சவர் அங்காளம்மன், பாவாடைராயன், குறவன், குறத்தி, காளி, வீரன், காட்டேரி, வெள்ளாள கண்டன், பெரியாயி உள்ளிட்ட வேடங்களுடன் அம்மன் வீதியுலாவாக மயானம் நோக்கிச் சென்றது. அங்கு பிற்பகல் 3:00 மணியளவில் திரளான பக்தர்கள் உணவு தானியங்களை இறைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.