/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் பகுதிகளில் மயானக் கொள்ளை
/
விழுப்புரம் பகுதிகளில் மயானக் கொள்ளை
ADDED : பிப் 28, 2025 05:36 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 85வது ஆண்டு மயான கொள்ளை நடந்தது.
விழுப்புரம் எம்.ஜி., ரோடு, மீன் மார்கெட் அருகே அங்காள பரமேஸ்வரி அம்மன் நேற்று மதியம் 1:25 மணிக்கு மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. சுவாமி வீதியுலாவாக, கே.கே., ரோட்டில் உள்ள சுடுகாட்டை நோக்கி ஊர்வலமாக சென்றது. அப்போது பக்தர்கள் பலர் சுவாமி வேடம் அணிந்து சென்றனர்.
சுடுகாட்டிற்கு சென்றவுடன் மக்கள் சுவாமிக்கு கொண்டு வந்த படையல்கள் மற்றும் சில்லறை காசுகள் வீசப்பட்டதை பொதுமக்கள் எடுத்துச் சென்றனர்.
இரவு 7:00 மணிக்கு பூத வாகனத்தில் அம்மன் வீதியுலாவும், இன்று மாலை 6:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. தொடர்ந்து வரும் மார்ச் 2ம் தேதி கும்ப படையல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்தனர்.
அவலுார்பேட்டை
அவலுார்பேட்டை முத்தாலம்மன் கோவிலில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிம்ம வாகனத்தில் மயான கொள்ளைக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். பெரிய குளக்கரை பகுதியில் நடந்த மயானக் கொள்ளை உற்சவத்தில் பக்தர்கள் காய்கறிகள், நவதானியங்கள் மற்றும் சில்லறை காசுகளை வீசினர். கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர்.
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி அங்காளம்மன் கோவிலில் நேற்று, புங்க பாறை, காளி வேடம் தரித்து அம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா வந்து மயானத்தில் கொள்ளையிடும் உற்சவம் நடந்தது. விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற காளி, அங்காளம்மன் என பல்வேறு வேடம் அணிந்த வேண்டுதலை நிறைவேற்றினர்.
செஞ்சி
செஞ்சி அங்காளம்மன் கோவிலில் நேற்று காலை 6:00 மணிக்கு குறத்தி அவதாரமும், 12:00 மணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரமும் நடந்தது.
மதியம் 1:00 மணிக்கு பல்வேறு வேடமணிந்த பக்தர்கள் சூழ மயானம் புறப்பட்டு சென்று மாலை 6:00 மணிக்கு சங்கராபரணி ஆற்றங்கரை மயானத்தில் மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.