/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குறைகேட்பு கூட்டம்: 644 மனுக்கள் குவிந்தன
/
குறைகேட்பு கூட்டம்: 644 மனுக்கள் குவிந்தன
ADDED : மார் 03, 2025 11:40 PM

விழுப்புரம்; விழுப்புரத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், 644 மனுக்கள் பெறப்பட்டன.
கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டாமாறுதல், தொழில் கடனுதவி கோருதல் உட்பட பல்வேறு துறை சார்ந்த 644 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில், டி.ஆர்.ஓ., அரிதாஸ், கூடுதல் கலெக்டர் பத்மஜா, தனித்துணை கலெக்டர் முகுந்தன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிவக்கொழுந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தமிழரசன், மாவட்டவழங்கல் அலுவலர் சந்திரசேகர், ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி உட்பட துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.