/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திருநங்கைகளுக்கான குறைகேட்பு கூட்டம்
/
திருநங்கைகளுக்கான குறைகேட்பு கூட்டம்
ADDED : ஜூலை 21, 2024 07:42 AM

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், திருநங்கைகளுக்கான குறைகேட்புக் கூட்டம், நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் பழனி பேசுகையில், திருநங்கைகள் சுயமாகவும், சுதந்திரமாகவும் செயல்படும் வகையில், பல்வேறு சிறப்புத் திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இதுமட்டுமல்லாமல், மாவட்டம் தோறும் திருநங்கைகளுக்கான குறைகேட்புக் கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில், திருநங்கைகளுக்கான குறைகேட்புக் கூட்டம் நடத்தப்படுகிறது' என்றார்.
இதனைத் தொடர்ந்து, திருநங்கைகளின் கோரிக்கை அடிப்படையில், உடனடி தீர்வின் மூலம் 8 திருநங்கைகளுக்கு, மருத்துவ காப்பீடு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள், சப் கலெக்டர் முகுந்தன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.