/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் பொம்மபுர ஆதீன திருமடத்தில் குருபூஜை விழா
/
மயிலம் பொம்மபுர ஆதீன திருமடத்தில் குருபூஜை விழா
ADDED : மே 23, 2024 10:38 PM

மயிலம்: மயிலம் பொம்மபுர ஆதீன திருமடத்தில் குருபூஜை விழா நடந்தது.
மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் பெரிய மடம் பொம்மையார்பாளையத்தில் உள்ளது. இந்த மடத்தில் பாலசித்தரின் குருபூஜை விழா நடந்தது. அதனையொட்டி சித்தருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடந்தது.
பின், மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்ட சுவாமிகள் கொலுவில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் மஸ்தான், மயிலம் சேர்மன் யோகேஸ்வரி, கவுன்சிலர் செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து சென்னை பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறை தலைவர் ராமலிங்கம், மதுரை மாநில வீர சைவ பேரவை தலைவர் நாகரத்தினம், காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லுாரி முன்னாள் முதல்வர் முருகசாமி தலைமையில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.
அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரி இணை பேராசிரியர் அசோகன், பொம்மையார்பாளையம் முன்னாள் தமிழ் ஆசிரியர் வேணுகோபால், மயிலம் தமிழ் கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு, ஆதிகேசவன் ஆகியோர் சித்தரின் பெருமைகள் குறித்து சிறப்புரையாற்றினர்.
ராஜேஸ்வரி கலை அறிவியல் கல்லுாரி செயலாளர் சிவக்குமார், மயிலம் சிவப்பிரகாசர் பள்ளி தாளாளர் விஸ்வநாதன், தமிழ் கல்லுாரி செயலாளர் ராஜிவ்குமார் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.