ADDED : மே 13, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் அருகே கடையில் குட்கா பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் டவுன் டி.எஸ்.பி., சுரேஷ்பாண்டியன் மேற்பார்வையில், ரோஷணை இன்ஸ்பெக்டர் தாரனேஸ்வரி மற்றும் போலீசார் திண்டிவனம் அடுத்த தீவனுாரில் நேற்று காலை சோதனையில் ஈடு பட்டனர். அதில், அப்பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 34; என்பவர் கடையில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.