ADDED : மே 30, 2024 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே குட்கா விற்ற ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையிலான போலீசார், நேற்று பானாம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு, அரசால் தடை செய்த குட்கா பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து அரியலுார் கிராமத்தை சேர்ந்த முகமது ஆரிப்,47; கைது செய்தனர்.