ADDED : ஜூன் 02, 2024 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் சித்தேரிக்கரை பகுதியில் உள்ள பெட்டிக்கடையில், டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரியங்கா தலைமையிலான போலீசார், நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு குட்கா பதுக்கி விற்ற கடை உரிமையாளரான முத்தோப்பு, திடீர்குப்பம் பகுதியைச் சேர்ந்த சுகுமாறன், 65; என்பவரை கைது செய்து, 15 பாக்கெட் குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.