ADDED : மே 24, 2026 04:50 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
சங்க மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். செயலாளர் அறிவழகன் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். இதில், வேலை வாய்ப்பு இல்லாமல் அவதிப்படும் இளைஞர்களை கரப்பான் பூச்சி, ஒட்டுண்ணிகள் என கிண்டல் செய்த தலைமை நீதிபதியை கண்டித்து கையெழுத்து இயக்கம் நடந்தது.
அப்போது, மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், வாலிபர் சங்க வட்ட செயலாளர் மதன்ராஜ், நிர்வாகிகள் மாதவன், முத்துக்கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
