/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இருதய நோய் இலவச சிகிச்சை முகாம்
/
இருதய நோய் இலவச சிகிச்சை முகாம்
ADDED : மே 13, 2024 05:57 AM

விழுப்புரம்: விழுப்புரம் ஜெயின் சங்கம், புதுச்சேரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சார்பில் இலவச இருதய நோய் சிறப்பு சிகிச்சை முகாம் விழுப்புரத்தில் நடந்தது.
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நடந்த முகாமிற்கு, ஜெயின் சங்கத் தலைவர் ரஞ்சித்குமார் தலைமை தாங்கினார். லட்சுமணன் எம்.எல்.ஏ., முகாமைத் துவக்கி வைத்து, மகளிருக்கு தையல் மிஷின்களை வழங்கினார்.
முகாமில், இருதயம், நுரையீரல், கண், காது, மூக்கு, தொண்டை மட்டு மின்றி பெண்கள், குழந்தைகள் சார்ந்த நோய்கள் குறித்தும் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கப் பட்டது.
இதில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவமனை கண்காணிப்பாளர் லோகநாதன், டாக்டர்கள் ரியாஸ், வெங்கடேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர், பொதுமக்களை பரிசோதித்தனர்.
முகாமில், சரஸ்வதி பள்ளி தாளாளர் ராஜசேகரன், அகர்சந்த் சோர்டியா, ஜெயின் சங்க நிர்வாகிகள் ரிக்காப்சந்த், ஆடிட்டர்கள் ராஜேஷ்குமார், கியான்சந்த், கஜ்சுக்மல், தர்ஷன், விஜய்சேத்தியா, மகேந்தர் தோக்கா, விமல்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.