ADDED : மார் 15, 2025 06:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: mவிழுப்புரத்தில் ஹோலி பண்டிகையை, வட இந்தியர்கள் வண்ணங்களை பூசி கொண்டாடினர்.
அதனையொட்டி நேற்று முன்தினம் இரவு முதல் கொண்டாட்டத்தை தொடங்கினர். காமராஜர் வீதி, காந்தி வீதி, திரு.வி.க., வீதி, மந்தக்கரை, கீழ்பெரும்பாக்கம் சுற்று பகுதிகளில் வசித்து வரும் வட மாநிலத்தவர்கள் நேற்று காலை 8:30 மணி முதல் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்குள்ள ஜெயின் கோவில்களில் வழிபட்டு, புத்தாடை உடுத்தியும், இனிப்புகளை வழங்கியும் ஹோலியை கொண்டாடினர். மேலும், ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை முகத்தில் பூசியும் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.