/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஹோலி ஏஞ்சல் சி.பி.எஸ்.இ., பள்ளி நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை
/
ஹோலி ஏஞ்சல் சி.பி.எஸ்.இ., பள்ளி நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை
ஹோலி ஏஞ்சல் சி.பி.எஸ்.இ., பள்ளி நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை
ஹோலி ஏஞ்சல் சி.பி.எஸ்.இ., பள்ளி நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை
ADDED : மே 15, 2024 11:41 PM

மயிலம்: ரெட்டணை ஹோலி ஏஞ்சல் சீனியர் செகண்டரி பள்ளியில் சி.பி.எஸ்.இ., அரசு பொது தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ரெட்டணை ஹோலி ஏஞ்சல் சீனியர் செகண்டரி பள்ளியில் 10 ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொது தேர்வில் ஸ்ரீவத்சன் 436 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், கோபிகா 410 பெற்று இரண்டாவது இடத்தையும், நந்தினி 408 மதிப்பெண் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றார்.
பிளஸ் 2 சி.பி.எஸ்.இ., பொதுதேர்வில் இளங்கோ ஏ 1 கிரேடு பெற்று முதலிடத்தையும் ,ஈஸ்வரி ஏ 2 கிரேடு பெற்று இரண்டாவது இடத்தையும் சீனிதா பி 1 கிரேடு பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றனர். ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் பள்ளியில் 11ம் வகுப்பு அரசு பொது தேர்வு எழுதிய சுனிதா சிங், ரோஷினி ஆகியோர் 569 மார்க் பெற்று முதலிமும், ஜீவிகா 549 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம், ஸ்ரீ வித்யா 537 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
பள்ளியில் பதினோராம் வகுப்பு தேர்வு எழுதிய 86 மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். இதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை பள்ளி தாளாளர் பழனியப்பன் மற்றும் பள்ளியின் சீனியர் முதல்வர் அகிலா, பள்ளி முதல்வர் எரோமியாஸ் பாராட்டினர்.