/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆரோவில் ஸ்வரம் இசை மையத்தில் மன அமைதிக்கான ' ஹம்மிங் கல்'
/
ஆரோவில் ஸ்வரம் இசை மையத்தில் மன அமைதிக்கான ' ஹம்மிங் கல்'
ஆரோவில் ஸ்வரம் இசை மையத்தில் மன அமைதிக்கான ' ஹம்மிங் கல்'
ஆரோவில் ஸ்வரம் இசை மையத்தில் மன அமைதிக்கான ' ஹம்மிங் கல்'
ADDED : பிப் 10, 2025 05:51 AM

விழுப்புரம் : ஆரோவில் ஸ்வரம் இசை மையத்தில் நிறுவப்பட்டுள்ள 'ஹம்மிங் கல்' பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த கல்லில் இருந்து எழும் ஓம் என்ற ஒலி, பார்வையாளர்களின் உடல் மற்றும் மனதளவில் அமைதியை ஏற்படுத்தி, புத்துணர்வை அளிக்கிறது.
புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ., தொலைவில், சர்வதேச நகரமான ஆரோவில் அமைந்துள்ளது. இங்கு செயல்பட்டு வரும், 'ஸ்வரம்' இசை மையம் உள்ளது. இங்கு இசைக் கலைஞர்களின் முயற்சியால், தனித்துவம் வாய்ந்த 'ஹம்மிங் கல்' உருவாக்கி, நிறுவப்பட்டுள்ளது.
ஆறடி உயரத்தில் நீள் சதுர வடிவில் உள்ள இந்த இந்த 'ஹம்மிங் கல்' , பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் என தனித்தனி இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கல்லின் மேல் பகுதியில் ஒருவரின் தலை உள்ளே நுழையும் அளவிற்கு வட்ட வடிவில், துவாரம் உள்ளது. இந்த துவாரத்தின் உள்ளே ஒருவர் தங்களின் தலையை வைத்து, ஹம் என 'ஹம்மிங்' செய்தால், புனிதமான 'ஓம்' என்ற ஒலி உருவாகி, எதிரொலிக்கிறது. இது, உடல் மற்றும் மனதிற்கு அமைதியை தருவதோடு, ஒத்திசைவான அதிர்வுகளை வழங்குகிறது. ஹம்மிங் கல் பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை தருவதாக உள்ளது.
இந்த 'ஹம்மிங் கல்' ஆரோவில் ஸ்வரம் இசை மையத்தின் திறமையான கைவினைஞர்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. கலைஞர்களின் ஒரு மாத உழைப்பில் 'ஹம்மிங் கல்' வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆரோவில் பவுண்டேஷன் செயலாளர் ஜெயந்திரவியின் தலைமையின் கீழ், ஸ்வரம் இசை பூங்கா, மிகப்பெரிய இசை ஆராய்ச்சி மையமாக உருவாகியுள்ளது.
ஸ்வரம் இசை மையத்தில் ஆராய்ச்சி மற்றும் புதிய கருவிகள் உருவாக்கம், ஆரோலியோ என்பவரின் தலைமையில் நடக்கிறது. இவர், இசை மற்றும் ஒலிவழி சிகிச்சை துறையில் முன்னணி நிபுணர் ஆவார். இங்கு, விரைவில் ஒலிவழி சிகிச்சை மையங்கள் உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் மக்களின் மன அழுத்தத்தை குறைத்து, ஒலியின் அதிர்வுகள் மூலம் உடல், மனநிலை ஆன்மிக ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என ஸ்வரம் இசை மையம் தெரிவித்துள்ளது.

