ADDED : ஆக 22, 2024 12:40 AM

வானுார் : சென்னையில் தனியார் நிறுவனத்திற்கு பணிக்கு சென்ற கணவர், காணாமல் போனதாக அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
கிளியனுார் அடுத்த தைலாபுரம் காந்தி நகரை சேர்ந்தவர் புஷ்பராஜ், 30; இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சரண்கலா. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் தினந்தோறும் சென்னைக்கு செல்லும் புஷ்பராஜ், இரவு வீடு திரும்புவது வழக்கம்
இந்நிலையில் கடந்த 19ம் தேதி காலை 7;00 மணிக்கு, வீட்டில் இருந்து புஷ்பராஜ், வேலைக்கு சென்றுள்ளார். பின் அன்றிரவு முழுவதும் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அவரது மொபைல் போனிற்கு தொடர்பு கொண்ட போது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அவரது மனைவி சரண்கலா, கிளியனூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன புஷ்பராஜியை தேடி வருகின்றனர்.