/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குழந்தைகளுடன் மனைவி மாயம் போலீசில் கணவர் புகார்
/
குழந்தைகளுடன் மனைவி மாயம் போலீசில் கணவர் புகார்
ADDED : ஜூன் 27, 2024 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: இரண்டு குழந்தைகளுடன் மனைவியைக் காணவில்லை என போலீசில், கணவர் புகார் அளித்துள்ளார்.
அனந்தபுரம் அடுத்த உடையாநத்தம், குளிர் சுனை கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் நாகப்பன், 39; இவரது மனைவி கவுதமி, 36; இவர்களுக்கு 14 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 17ம் தேதி முதல், கவுதமி மற்றும் இரண்டு குழந்தைகளையும் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து நாகப்பன் அளித்த புகாரின் பேரில், அனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.