/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'நான் ரெடி.. இன்றைக்கு கூட வாங்க..' : அன்புமணிக்கு மாஜி அமைச்சர் சண்முகம் சவால்
/
'நான் ரெடி.. இன்றைக்கு கூட வாங்க..' : அன்புமணிக்கு மாஜி அமைச்சர் சண்முகம் சவால்
'நான் ரெடி.. இன்றைக்கு கூட வாங்க..' : அன்புமணிக்கு மாஜி அமைச்சர் சண்முகம் சவால்
'நான் ரெடி.. இன்றைக்கு கூட வாங்க..' : அன்புமணிக்கு மாஜி அமைச்சர் சண்முகம் சவால்
ADDED : ஏப் 17, 2024 11:36 PM
திண்டிவனம் : ''உன் உருட்டல், மிரட்டலுக்கு பயப்படமாட்டேன்'' என பா.ம.க.,அன்புமணிக்கு மாஜி அ.தி.மு.க., அமைச்சர் சண்முகம் எச்சரிக்கை விடுத்து பேசினார்.
விழுப்புரம் லோக்சபா தொகுதி அ.தி.மு.க.,வேட்பாளர் பாக்யராஜிக்கு ஆதரவு தெரிவித்து, திண்டிவனத்தில் அ.தி.மு.க.,மற்றும் கூட்டணி கட்சியினர் பஙகேற்ற வாகன பேரணி நேற்று காலை நடந்தது. இதில் மாஜி அமைச்சர் சண்முகம் பேசியதாவது:
பா.ஜ., அரைவேக்காடு அண்ணாமலை சொல்கிறார் .தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க.,இருக்காது என்று. நாங்க 52 ஆண்டுகளாக இருக்கிறோம். முதல்ல பா.ஜ., ஜூன் 4ம் தேதிக்கு பிறகு இருக்கிறதா என்று பார்ப்போம்.
பா.ம.க.,அன்புமணி நமக்கு எச்சரிக்கை கொடுக்கிறார். அன்புமணிக்கு தைரியம், இருந்தால் உங்கள் மீது போடப்பட்ட வழக்கை சட்டப்படி சந்தித்திருக்க வேண்டும். பேடித்தனமாக பா.ஜ.,
வின் காலில் விழுந்தவன் நானில்லை.
என் மீது தி.மு.க.,ஆட்சியில் 23 வழக்குகள் போடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் தைரியமாக வழக்கை சந்தித்துக்கொண்டிருக்கிறேன். உன்னை போல நான் கோழையல்ல. அன்புமணி தேர்தலுக்கு பிறகு என்னை பார்ப்பதாக சொல்கிறார். நான் ரெடி. இன்றைக்கு கூட வாங்க.
உன் கொலைகார வேலையை 2016ல் நான் பார்த்தவன். கொலைகார குடும்பதானே.. உன் உருட்டல், மிரட்டலுக்கு இந்த சண்முகம் பயப்படமாட்டேன். உனக்கு முன் நான் அரசியலுக்கு வந்தவன். உங்க அப்பா அரசியலுக்கு வருவதற்கு முன் என் குடும்பம் அரசியலுக்கு வந்தது. வன்னியர் பெயரை சொல்லி பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் ஈனப்பிறவி நீ. அ.தி.மு.க.,பற்றி பேச அன்புமணிக்கு அருகதைகிடையது.
அன்புமணி என்னிடம் போனை போட்டு, எங்க அப்பா 40 ஆண்டு கால கனவு நிறைவேறிவிட்டது என்று போனில் கண்ணீர் விட்டு நடித்து நாடகம் ஆடியது அன்றைக்கு தெரியலையா. நன்றி கெட்டவர் யார் என்றால் அது அன்புமணிதான். என மாஜி அமைச்சர் சண்முகம் பேசினார்.

