/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலை அகலப்படுத்த எம்.ஜி.ஆர்., அய்யனார் கோவில் சிலைகள் அகற்றம்
/
சாலை அகலப்படுத்த எம்.ஜி.ஆர்., அய்யனார் கோவில் சிலைகள் அகற்றம்
சாலை அகலப்படுத்த எம்.ஜி.ஆர்., அய்யனார் கோவில் சிலைகள் அகற்றம்
சாலை அகலப்படுத்த எம்.ஜி.ஆர்., அய்யனார் கோவில் சிலைகள் அகற்றம்
ADDED : ஆக 08, 2024 12:28 AM

மரக்காணம் : திண்டிவனம் அடுத்த எண்டியூரில் சாலை அகலப்படுத்தும் பணிக்காக அய்யனாரப்பன் கோவில் மற்றும் எம்.ஜி.ஆர்., சிலைகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்.
திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் 32 கி.மீ., இருவழி சாலையை நான்கு வழி சாலையாக மாற்றம் செய்து, கடந்த 2021-22 ஆம் ஆண்டு முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் இருந்து ரூ.238 கோடி நிதி ஒதிக்கீடு செய்தது.
அதற்கான பணிகள் நடந்து வருகின்றது. வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் சாலை பணிகளை முடிக்கவேண்டும் என்ற அதிகாரிகளின் உத்தரவால் சாலை பணிகள் துரிதப்படுத்தியுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக எண்டியூரில் சாலை ஓரத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலை, அய்யனாரப்பன் கோவில் மற்றும் சிமென்டால் கட்டப்பட்ட அயனாரப்பன், குதிரை சிலைகளை அகற்ற நெடுஞ்சாலைதுறையினர் நிர்வாகிகளிடம் கூறியிருந்தனர்.
ஆனால் கோவில் நிர்வாகிகள் மற்றும் எம்.ஜி.ஆர்., சிலை நிர்வாகிகள் வேறு இடம் இல்லாததால் அப்புறப்படுத்தாமல் காலதாமதம் செய்து வந்தனர்.
இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் வருவாய்துறை, காவல்துறையினர் முன்னிலையில் எம்.ஜி.ஆர்., சிலை, அய்யனாரப்பன் கோவில் சிலைகளை பொக்லைன் எந்திரம் மூலம் நேற்று அகற்றினர்.