/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா
/
அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா
ADDED : ஜூலை 22, 2024 01:33 AM

செஞ்சி : செஞ்சி அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
சங்க தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் முருகன், சொர்ணலதா, கலியமூர்த்தி, பரமசிவம், அசோக் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஆளுநர் சரவணன் புதிய நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிய தலைவராக பரிமளகாந்தி, செயலாளராக புகழேந்தி, பொருளாளராக வெங்கடேஸ்வர பெருமாள் பதவியேற்றனர்.
முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் விஜயலட்சுமி, சிவக்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினார்.
விழாவில், காரியமங்களம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, அன்னை தெரசா முதியோர் இல்லம், துறிஞ்சம்பூண்டி மனநல காப்பகம், ஏம்பலம், செவலபுரை அரசு துவக்க பள்ளிகள், நாட்டேரி மழலையர் பள்ளி என பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. ராஜா தேசிங்கு அரசு பள்ளியில் 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
மாண்டல, மாவட்ட தலைவர்கள், புதிய உறுப்பினர்கள், அவலுார்பேட்டை, மேல்மலையனுார் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.