/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா
/
லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா
ADDED : ஜூலை 30, 2024 11:32 PM

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் கோவில் நகர லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு டாக்டர் மூர்த்தி தலைமை தாங்கினார். நிர்வாகி ராஜேந்திரன் வரவேற்றார். ரவிச்சந்திரன், ரவிக்குமார், தேன் மொழி முன்னிலை வகித்தனர். தலைவராக கமலக்கண்ணன், செயலாளராக ஜெகதீசன், பொருளாளராக பார்த்தசாரதி ஆகியோரை கூட்டு மாவட்டத் தலைவர் மதியழகன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னாள் ஆளுனர் முரளி துாய்மைப் பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினார்.
கமல்கிஷோர் ஜெயின் புதிய உறுப்பினர்களை இணைத்தார். மண்டலத் தலைவர் முரளிதரன், வட்டார தலைவர் அன்பழகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் தங்கவேல், சுகுமாரன், ராமதாஸ், பெருமாள், ராஜேந்திரன், குரு, ஜெகன், பிரகாஷ், ஜெயச்சந்திரன், செல்வராஜ், மேகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்டத் தலைவர் குணசேகரன் நன்றி கூறினார்.

