/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ.27.10 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டடம் திறப்பு
/
ரூ.27.10 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டடம் திறப்பு
ரூ.27.10 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டடம் திறப்பு
ரூ.27.10 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டடம் திறப்பு
ADDED : ஆக 28, 2024 04:00 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் 27.10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு விழா நடந்தது.
வி.மருதுார், ராஜிவ் காந்தி நகர், அண்ணா நகர் பகுதிகளில் விழுப்புரம் தொகுதி சட்டசபை உறுப்பினர் மேம்பாட்டு நிதி மூலம் 13.20 மற்றும் 13.90 லட்சம் ரூபாய் என 27.10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 அங்கன்வாடி மைய கட்டடங்கள் புதிதாக கட்டப்பட்டது.
இந்த கட்டடங்களின் திறப்பு விழா நேற்று நடந்தது. லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி 2 கட்டடங்களையும் திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு மற்றும் கல்வி உபகரண பொருட்களை வழங்கினார்.
விழாவில், நகர செயலாளர் சக்கரை, கவுன்சிலர்கள் வடிவேல் பழனி, ரியாஸ் அகமது, வார்டு செயலாளர் செந்தில் முருகன், த.வா.க., மோகன், பொறியாளர் அணி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் முபாரக்அலி, வார்டு பிரதிநிதிகள் ஆனந்தன், லியாகத்பாஷா, நகர தொண்டர் அணி துணை அமைப்பாளர் பிரகதீஷ், இளைஞர் அணி ராஜேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

