/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வி.ஆர்.எஸ்., கல்லுாரியில் வகுப்புகள் துவக்க விழா
/
வி.ஆர்.எஸ்., கல்லுாரியில் வகுப்புகள் துவக்க விழா
ADDED : செப் 05, 2024 05:37 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் இந்த கல்வியாண்டின் முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுகம், வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
முதல்வர் அன்பழகன் தலைமை தாங்கினார். நிறுவனர் சரவணன் சிறப்புரையாற்றினார். இவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள இந்த கல்லுாரி, இங்குள்ள மக்களின் கல்வி தேவையை அறிந்து துவங்கப்பட்டது.
கல்லுாரி பருவத்தில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கத்தின் முக்கியத்துவம், மேம்படுத்தப்பட்ட கல்வியோடு சேர்த்து ஒழுக்கமான மாணவர்களாக வளர வேண்டுமென இந்த கல்லுாரியில் முழு முயற்சி எடுப்பதாக கூறினார். மேலும், நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்தி மாணவர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழ் வழியில் பயின்று, பொறியியல் கல்லுாரியில் பயின்ற மாணவர்கள் தற்போது உயர்ந்த நிலையில் உள்ளதாக கூறினார். முதலாம் ஆண்டு துறை தலைவர் பெருமாள் நன்றி கூறினார்.