/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பார்மசி கல்லுாரியில் வகுப்புகள் துவக்க விழா
/
பார்மசி கல்லுாரியில் வகுப்புகள் துவக்க விழா
ADDED : ஆக 31, 2024 03:15 AM

செஞ்சி: ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி பார்மசி கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
இக்கல்லுாரியில் டி.பார்ம் 9 வது பேட்ச் மாணவர்களுக்கும், டி.எம்.எல்.டி., 7வது பேட்ச் மாணவர்களுக்கும் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது. கல்லுாரி தாளாளர் ரங்கபூபதி தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீபதி முன்னிலை வகித்தார்.
இயக்குனர் சாந்தி குத்துவிளக்கேற்றினார். கல்லுாரி முதல்வர் ராஜேஷ் வரவேற்றார். செயல் இயங்குநர் சிவசங்கர் வாழ்த்திப் பேசினார்.
மோகன்ராஜ், இம்ரான்கான், லில்லி ஜூலி, பாலமுருகன், ராஜேஷ், கலைப்பிரியா, வள்ளி, காயத்திரி, நந்தினி, அஜித்குமார் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு பாட புத்தகம் மற்றும் சீருடை வழங்கப்பட்டது.