/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஜான்டூயி சி.பி.எஸ்.இ., பள்ளியில் கிரிக்கெட் மைதானம் திறப்பு
/
ஜான்டூயி சி.பி.எஸ்.இ., பள்ளியில் கிரிக்கெட் மைதானம் திறப்பு
ஜான்டூயி சி.பி.எஸ்.இ., பள்ளியில் கிரிக்கெட் மைதானம் திறப்பு
ஜான்டூயி சி.பி.எஸ்.இ., பள்ளியில் கிரிக்கெட் மைதானம் திறப்பு
ADDED : ஜூலை 18, 2024 11:26 PM

விழுப்புரம்: விழுப்புரம் ஜான்டூயி இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ., பள்ளியில் இரண்டு கிரிக்கெட் பயிற்சி மைதானம் திறப்பு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் வீரதாஸ் தலைமை தாங்கினார். கல்வி நிர்வாக இயக்குனர் எமர்சன் ராபின் முன்னிலை வகித்தார்.
அசாம் மாநிலம், எய்ம்ஸ் மருத்துவமனை, தலைமை டாக்டர் சின்ஹாசன் 2 கிரிக்கெட் பயிற்சி மைதானத்தை திறந்து வைத்து பேசுகையில், 'விளையாட்டு என்பது உடல் நலத்தையும், மனநலத்தையும் மேம்படுத்தும். விடாமுயற்சியோடு ஆர்வமும் இருந்தால் மட்டுமே தேசிய, மாநில அளவில் இடம் பிடிக்க முடியும். விளையாட்டில் வெற்றி, தோல்வியை சமமாக எடுத்து கொண்டு, மேலும் முன்னேற முயற்சிக்க வேண்டும்' என்றார்.
இந்த கிரிக்கெட் பயிற்சி மைதானத்திற்கு, பயிற்சியாளராக ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.