/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் கன்யா ரமேஷ் தங்க மாளிகை திறப்பு விழா
/
விழுப்புரத்தில் கன்யா ரமேஷ் தங்க மாளிகை திறப்பு விழா
விழுப்புரத்தில் கன்யா ரமேஷ் தங்க மாளிகை திறப்பு விழா
விழுப்புரத்தில் கன்யா ரமேஷ் தங்க மாளிகை திறப்பு விழா
ADDED : ஜூன் 12, 2024 11:59 PM

விழுப்புரம் : விழுப்புரத்தில் 59 ஆண்டுகளாக தங்க நகை விற்பனையில் பாரம்பரியம் கொண்ட கன்யா ரமேஷ் புதிய தங்க மாளிகை, நேருஜி ரோடு சிக்னல் அருகே புதிதாக நேற்று திறக்கப்பட்டது.
விழாவுக்கு உரிமையாளர் கன்னியாலால் தலைமை வகித்தார். விருத்தாசலம் ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் அகர்சந்த் ஜெயின் தங்க மாளிகையை திறந்து வைத்தார்.
சென்னை ஜே.சி. சில்வர்ஸ் பிரகாஷ்சந்த், சென்னை ஜே., டைமண்ட்ஸ் அசோக்குமார், விழுப்புரம் கௌதம் ஜூவல்லர்ஸ் சாந்திலால், ஆடிட்டர்கள் குலோத்துங்கன், ராஜேஷ், இ.எஸ். கல்வி குழும நிறுவனர் சாமிக்கண்ணு, வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் ராமகிருஷ்ணன். மகாலட்சுமி குழுமம் பிரகாஷ், கன்னிகா பரமேஸ்வரி ஸ்டோர்ஸ் குணசேகரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
சென்னை ஜே.சி., செயின்ஸ் உரிமையாளர் மகாவீர்சந்த் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
கன்யா ரமேஷ் தங்க மாளிகை உரிமையாளர்கள் ரமேஷ்குமார், ராஜேஷ்குமார், தினேஷ்குமார் மற்றும் பவன்குமார், தைரியகுமார், ஸ்ரே, தீபக், பர்க்ஷீத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
புதிய தங்க மாளிகை திறப்பு விழாவையொட்டி சிறப்பு சலுகையாக, பொதுமக்கள் வாங்கும் தங்கை நகைகளுக்கு, எடைக்கு எடை வெள்ளிக்காசு இலவசமாக வழங்கப்படும். ஒரு பவுனுக்கு ரூ.1,000 சிறப்பு தள்ளுபடி போன்ற சலுகைகள் 16ஆம் தேதி வரை வழங்கப்படும்.
நியாயமான விலை, வெள்ளி பொருள்களுக்கும் செய்கூலி சேதாரம் இல்லை. வைரத்தின் விலையில் 1 கேரட்டிற்கு ரூ.15 ஆயிரம் தள்ளுபடி, 100 சதவீதம் பிஐஎஸ் 916 ஹால்மார்க் தங்க நகைகள், மிக குறைந்த சேதாரத்தில், செய்கூலியின்றி விற்பனை செய்யப்படும் என உரிமையாளர் ரமேஷ்குமார் தெரிவித்தார்.