/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நடமாடும் கால்நடை மருந்தகம் விழுப்புரத்தில் துவக்க விழா
/
நடமாடும் கால்நடை மருந்தகம் விழுப்புரத்தில் துவக்க விழா
நடமாடும் கால்நடை மருந்தகம் விழுப்புரத்தில் துவக்க விழா
நடமாடும் கால்நடை மருந்தகம் விழுப்புரத்தில் துவக்க விழா
ADDED : செப் 01, 2024 11:11 PM

விழுப்புரம் : விழுப்புரத்தில், நடமாடும் கால்நடை மருந்தக வாகன சேவை துவக்க விழா நடந்தது.
புதிய பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா முன்னிலை வகித்தார். அமைச்சர் பொன்முடி தேசிய கால்நடை நோய்த் தடுப்புத் திட்டத்தின்கீழ், தலா 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 கால்நடை மருந்தக வாகனங்களின் சேவையை துவக்கி வைத்து கூறுகையில், 'இந்த வாகனங்கள், கெடார், கிளியனுார், சித்தலிங்கமடம் ஆகிய கிராமங்களை தலைமையிடமாக கொண்டு இயக்கப்படும். கால்நடைகளின் சிகிச்சைக்காக 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1962 மூலம் தொடர்பு கொள்ளலாம்' என்றார்.
மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், மாவட்ட கவுன்சிலர் விஸ்வநாதன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அழகுவேல், உதவி இயக்குனர் மோகன், கால்நடை மருத்துவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.