/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சேஷாங்கனுார் திருவள்ளுவர் பள்ளியில் கட்டடம் திறப்பு விழா
/
சேஷாங்கனுார் திருவள்ளுவர் பள்ளியில் கட்டடம் திறப்பு விழா
சேஷாங்கனுார் திருவள்ளுவர் பள்ளியில் கட்டடம் திறப்பு விழா
சேஷாங்கனுார் திருவள்ளுவர் பள்ளியில் கட்டடம் திறப்பு விழா
ADDED : செப் 09, 2024 05:48 AM

கண்டமங்கலம்: கண்டமங்கலம் அடுத்த சேஷாங்கனுார் திருவள்ளுவர் அரசு நிதியுதவி நடுநிலைப் பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு விழா நடந்தது.
பள்ளியின் நிறுவனர் பொன் சீனுவாசனின, பிறந்த நாள் நுாற்றாண்டு நிறைவு விழாவையொட்டி நடந்த விழாவிற்கு, ஊராட்சி தலைவர் தாமரைவதனி குமரன் தலைமை தாங்கினார்.
பள்ளி நிர்வாகி மற்றும் தலைமையாசிரியர் சீனிகலையரசன், ஓய்வுபெற்ற ஆசிரியர் குணசீலன் வரவேற்றனர்.
கண்டமங்கலம் வட்டார கல்வி அலுவலர் சேகர் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். வட்டார கல்வி அலுவலர் நிலை-2 சுமதி, காந்தி மேல்நிலைப் பள்ளியின் நிர்வாகி ரவீந்திரன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.