ADDED : ஏப் 28, 2024 05:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
ஒன்றிய செயலாளர் பன்னீர் தலைமை தாங்கி திறந்து வைத்து இளநீர், மோர், தர்பூசணி, வெள்ளரி உள்ளிட்ட பழ வகைகளை பொது மக்களுக்கு வழங்கினார்.
ஒன்றிய பேரவை செயலாளர் சரவணகுமார், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் தவமணி, ஒன்றிய தலைவர் பழனி, மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன், பேரவை துணைத் தலைவர் பெரியான், மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் சங்கர நாராயணன்.
பேரவை இணைச் செயலாளர் காத்தவராயன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் மணி, ஒன்றிய மாணவரணி திருநாவுக்கரசு, ஒன்றிய கவுன்சிலர் இளங்கோ, முன்னாள் கவுன்சிலர் விஜயா நாகராஜ் , கிளைச் செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

