/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இந்திய செஞ்சிலுவை சங்கம் மாணவர்களுக்கு போட்டிகள்
/
இந்திய செஞ்சிலுவை சங்கம் மாணவர்களுக்கு போட்டிகள்
ADDED : செப் 14, 2024 07:48 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில், இந்திய செஞ்சிலுவை சங்கம் ஜெனிவா கன்வென்ஷன் 75வது ஆண்டை முன்னிட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின், சமுதாய செயல்களை காட்டும் வகையில், பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றது.
விழுப்புரம் செஞ்சிலுவை சங்க அலுவலகத்தில் நடந்த போட்டியில், விழுப்புரம் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள், சிகா மேலாண்மை கல்லூரி மாணவிகள், திருவெண்ணைநல்லூர் அரசு கல்லூரி மாணவ, மாணவிகள், திருக்கோவிலூர் வள்ளியம்மை மகளிர் கல்லூரி மாணவிகள், திருநாவலூர் ஜோசப் கல்லூரி மாணவ மாணவிகள், கெங்கராம்பாளையம் ஐஎப்இடி இன்ஜினியரிங் கல்லூரி மாணவிகள், திண்டிவனம் சேக்ரெட் மகளிர் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பல கல்லூரி மாணவ, மாணவிகள் போட்டிகளில் கலந்துகொண்டு, திறனை வெளிப்படுத்தினர்.
செஞ்சிலுவை சங்க மாவட்ட தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கி, மாணவர்களை பாராட்டினார். செயலர் வைத்தீஸ்வரன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் அண்ணாபால்ராஜ், செஞ்சிலுவை சங்க அலுவலர் சிவகங்கா, திட்ட அலுவலர்கள் ராதா, முத்தையன், கனகராஜ், ஜனனி, இந்திரா, பாலு, கனிமொழி, பரணி, தனலட்சுமி, லோகு மற்றும் திட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.