/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிறுவந்தாடு மார்க்கெட் கமிட்டியில் விளைபொருட்கள் கொள்முதல் துவக்கம்
/
சிறுவந்தாடு மார்க்கெட் கமிட்டியில் விளைபொருட்கள் கொள்முதல் துவக்கம்
சிறுவந்தாடு மார்க்கெட் கமிட்டியில் விளைபொருட்கள் கொள்முதல் துவக்கம்
சிறுவந்தாடு மார்க்கெட் கமிட்டியில் விளைபொருட்கள் கொள்முதல் துவக்கம்
ADDED : ஜூன் 15, 2024 06:32 AM

விழுப்புரம்: சிறுவந்தாடு துணை மார்க்கெட் கமிட்டியில் விளைபொருட்கள் கொள்முதல் செய்யும் பணி துவங்கியது.
விழுப்புரம் விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும், சிறுவந்தாடு துணை மார்க்கெட் கமிட்டி திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது.
தற்போது, சுற்று வட்டார பகுதிகளில், விளையும் நெல், உளுந்து, காராமணி, வேர்க்கடலை, மிளகாய், பருத்தி போன்ற அனைத்து வேளாண் விளை பொருட்களும், மறைமுக ஏலத்தின் மூலம், வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படும் பணி துவங்கியுள்ளது.
விழுப்புரம் விற்பனைக்கு குழு செயலாளர் சந்துரு நேற்று நேரில் பார்வையிட்டார். விற்பனை கூடபொறுப்பாளர் வெங்கட்ராமன், பிரபாகரன், அய்யனார் உள்ளிட்ட விவசாய பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
இதுகுறித்து, விற்பனைக்கு குழுவின் செயலாளர் கூறுகையில், 'விவசாயிகளால் சிறுவந்தாடு துணை மார்க்கெட் கமிட்டிக்கு கொண்டு வரப்படும் விளை பொருட்களுக்கு, மறைமுக ஏலம் நடத்தப்பட்டு, விளை பொருட்களுக்கு அதிக லாபம் பெற்று தரப்படுகிறது.
எனவே, சுற்றுவட்டாரப் பகுதி விவசாய பெருமக்கள், தங்கள் விளை பொருட்களை சிறுவந்தாடு துணை மார்க்கெட் கமிட்டிக்கு கொண்டு வந்து, விற்று பயனடையலாம்' என்றார்.