/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காயமடைந்த புள்ளிமான் வனத்துறையினர் மீட்பு
/
காயமடைந்த புள்ளிமான் வனத்துறையினர் மீட்பு
ADDED : மார் 11, 2025 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே காயமடைந்த புள்ளி மானை பொதுமக்கள் வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
திருவெண்ணெய்நல்லூர் அடுத்த மனக்குப்பம் தனியார் திருமண மண்டபம் முன் புள்ளிமான் வாகனம் மோதி மயங்கிய நிலையில் கிடப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் வனத்துறை அதிகாரியிடம் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வன காவலர் கோபாலகிருஷ்ணன் காயம் அடைந்திருந்த மானை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.