/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓட்டு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணி மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி ஆய்வு

ADDED : ஏப் 05, 2024 11:45 PM

விழுப்புரம்: விழுப்புரம் (தனி) தொகுதிக்கான, ஓட்டு எண்ணும் மையமான, விழுப்புரம் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லுாரியில் நேற்று விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
ஒட்டுப்பதிவு தினத்தன்று பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக தனித்தனியாக வைப்பதற்காக அமைக்கப்பட உள்ள அறைகள். ஓட்டு எண்ணும் அறையில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது.
ஒலிப்பெருக்கி வசதி அமைப்பது. தடையில்லா மின்சார வசதி, கூடுதலாக ஜெனரேட்டர் வசதி, தீயணைப்புக் கருவி, தேர்தல் பார்வையாளர் அறைகள்.
தேர்தல் நடத்தும் அலுவலரின் அறை, முகவர்கள் அறை, காவலர்கள், ராணுவத்தினர் அறை, காவல் கட்டுப்பாட்டு அறை, தொலைத்தொடர்பு வசதி. இணையதள மற்றும் கணினி வசதியுடன் கூடிய செய்தியாளர் ஊடக மைய அறை, மருத்துவக்குழுவினர் அறை அமைக்க முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை பார்வையிட்டு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி கூறினார்.
டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, ஆர்.டி.ஓ., காஜா ஷாகுல் ஹமீது, தாசில்தார் வசந்தகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.