
விழுப்புரம்: விழுப்புரம் தெய்வானை அம்மாள் கல்வியியல் கல்லுாரியில் சர்வதேச யோகா தின விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் முருகன் வரவேற்று, மாணவிகளுக்கு யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி துவக்கி வைத்தார். விழுப்புரம் மனவளக்கலை மன்ற பேராசிரியர்கள் தனஞ்செயன், தவம் ஆகியோர் சுவாச பயிற்சியை மேற்கொண்டனர்.
செயலாளர் சிவப்பிரகாசம், யோகாவின் எளிய பயிற்சி முறையை விளக்கினார். பேராசிரியர் வேணு பல்வேறு ஆசனங்கள் நிகழ்த்தி, அதன் பயன்களையும் கூறினார். மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இ.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதல்வர் முரளிதரன், துணை முதல்வர் வேல்முருகன் தலைமை தாங்கினர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஜோன் சார்லஸ் வரவேற்றார். ஆனந்த மூர்த்தி, யோகா வரலாறு, இதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து காணொலி மூலம் விளக்கி, பல்வேறு யோகாசனங்களை செய்து காண்பித்து பயிற்சி அளித்தார்.
திண்டிவனம்
மரக்காணம் சாணக்கிய வித்யாஷ்ரம் சீனியர் செகண்டரி பள்ளியில் நடந்த விழாவிற்கு, பள்ளியின் துணை தாளாளர் வேல்முருகன் தலைமை தாங்கி யோகா பயிற்சியை துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் நரேன் பாபு வரவேற்றார். மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் யோகாசனம் செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார்
திருவெண்ணெய்நல்லுார் போன் நேரு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி நிர்வாக இயக்குனர் விஜயசாந்தி வாசுதேவன் தலைமை தாங்கினார். தாளாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். விழாவில் யோக கலை பயிற்சியாளர்கள் ஆதிநாராயணன், முத்து, சுந்தர்ராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பள்ளியில் உள்ள 6 வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பயிற்சியளித்தனர்.
கள்ளக்குறிச்சி
ஜே.எஸ்., குளோபல் அகாடமி பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். துணை முதல்வர் பாபு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், யோகா செய்யும் வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து மாணவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.