/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உயர்கல்வி ஆலோசனை பெற தொலைபேசி எண் அறிமுகம்
/
உயர்கல்வி ஆலோசனை பெற தொலைபேசி எண் அறிமுகம்
ADDED : மே 16, 2024 11:06 PM
விழுப்புரம்: தமிழகத்தில், பிளஸ் 2முடித்த மாணவர்கள் அனைவரும், உயர்கல்வி பயில்வதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு, முதல் தலைமுறை பட்டதாரி ஒதுக்கீடு, அரசு கல்லுாரிகளில் கட்டண சலுகை, கல்வி ஊக்கத் தொகை உள்ளிட்ட விபரங்களை, பிளஸ் 2 தேர்ச்சியடைந்த மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், கல்லுாரி விபரங்கள், கல்விக்கடன் உள்ளிட்ட விபரங்களை அறிய அரசு பள்ளிக் கல்வித்துறையின் 14417 என்ற தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.
மனநல ஆலோசனை
தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மன நல ஆலோசனை, வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ்., வளாகத்தில் பொதுமக்களுக்கு மருத்துவ உதவி தகவல் மையம் (தொலைபேசி 104) மற்றும் மாணவர்களுக்காக 'நட்புடன் உங்களோடு' மனநல சேவை மையம் ( தொலைபேசி 14416) ஆகியவை 24 மணி நேரமும் செயல்படுகிறது.

