தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அரசு கல்லுாரி மாணவர்களுக்கு அறிமுக பயிற்சி திட்டம் துவக்கம்

அரசு கல்லுாரி மாணவர்களுக்கு அறிமுக பயிற்சி திட்டம் துவக்கம்

அரசு கல்லுாரி மாணவர்களுக்கு அறிமுக பயிற்சி திட்டம் துவக்கம்


ADDED : ஜூன் 30, 2026 06:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2026 06:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரியில் இன்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அறிமுக பயிற்சி திட்டம் நடக்கிறது.

கல்லுாரி முதல்வர் கனகசபாபதி செய்திக்குறிப்பு:

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் இந்த கல்வியாண்டில் சேர்ந்த முதலாம் ஆண்டு இளநிலை மாணவர்களுக்கு இன்று 1ம் தேதி முதல் வகுப்புகள் துவங்குகிறது. இந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஒருவார கால அறிமுக பயிற்சி திட்டம் இன்று 1ம் தேதி முதல் வரும் 8ம் தேதி வரை நடக்கிறது.

இந்த அறிமுக பயிற்சி திட்டத்தில், கல்லுாரி அறிமுகமாக கட்டமைப்பு, பாடத்திட்டம், தேர்வு முறைகள், மதிப்பெண் வழங்கும் முறை, பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வாக பாலின சமத்துவம், போதை பொருள் ஒழிப்பு, ராகிங் தடுப்பு சட்டங்கள், திறன் மேம்பாடு, மன அழுத்தம் குறைப்பு குறித்து கற்பிக்கப்படுகிறது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us