/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலை பாதுகாப்பு விழா மட்டும் போதுமா? ரிப்ளக்டர் இல்லாத டிராக்டர்களை யார் கவனிப்பது

ADDED : மார் 12, 2025 07:36 AM
செஞ்சி : விழுப்புரம் மாவட்டத்தில் ரிப்ளக்டர் இல்லாமல் இயக்கப்படும் டிராக்டர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் நிறைந்த பகுதியாக செஞ்சி, மேல்மலையனுார் தாலுகாக்கள் உள்ளன. விவசாயிகள் அதிகம் இருப்பதால் இப்பகுதியில் டிராக்டர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் உள்ளது.
இதில் பெரும்பாலான டிராக்டர் டிப்பர்கள் 10 முதல் 20 ஆண்டுகளை கடந்தவை. இந்த டிப்பர்களில் எந்த விதமான ரிப்ளக்டர்களும் இல்லை. சிகப்பு விளக்கும் எரிவதில்லை. இந்த டிப்பர்களில் தான் விவசாயிகள் நெல், கரும்பு உள்ளிட்ட விளைபொருட்களை ஆலைக்கும், மார்க்கெட் கமிட்டிக்கும் இரவு நேரத்தில் கொண்டு வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் அதிக வெளிச்சத்துடன் எதிரே வரும் வாகனங்களால் ரிப்ளக்டர் ஸ்டிக்கரும், சிகப்பு விளக்கும் இல்லாமல் முன்னே செல்லும் டிராக்டர் டிப்பர்கள் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை.
இதனால் இரு சக்கர வாகனத்திலும், கார்களிலும் வருபவர்கள் டிப்பர் மீது மோதி அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு விழாவை, வட்டார போக்குவரத்து அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை சார்பில் கொண்டாடுகின்றனர்.
சாலை பாதுகாப்பிற்கு இந்த பிரசாரம் மட்டும் போதாது. தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ரிப்ளக்டர் ஸ்டிக்கர் இல்லாமல் வரும் டிப்பர்கள், மினி வேன்கள், இரு சக்கர வாகனங்களில் ஸ்டிக்கர் ஓட்டினால் விபத்துகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.