/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நகராட்சி பூங்காவில் ஜெ., சிலை அ.தி.மு.க.,வினர் கலெக்டரிடம் மனு
/
நகராட்சி பூங்காவில் ஜெ., சிலை அ.தி.மு.க.,வினர் கலெக்டரிடம் மனு
நகராட்சி பூங்காவில் ஜெ., சிலை அ.தி.மு.க.,வினர் கலெக்டரிடம் மனு
நகராட்சி பூங்காவில் ஜெ., சிலை அ.தி.மு.க.,வினர் கலெக்டரிடம் மனு
ADDED : ஜூன் 03, 2024 06:42 AM

விழுப்புரம், : விழுப்புரம் நகராட்சி நவீன பூங்காவில், முன்னாள் முதல்வர் ஜெ., சிலையை அமைக்க வேண்டும் என, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மனு அளித்தனர்.
விழுப்புரம் கலெக்டர் பழனியை சந்தித்து, அ.தி.மு.க., கவுன்சிலர் ராதிகா செந்தில் தலைமையில் அளித்துள்ள மனு:
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் முந்தைய அ.தி.மு.க., ஆட்சியின்போது, முதல்வராக இருந்த ஜெ., உத்தரவின்பேரில் நவீன பூங்கா கொண்டு வரப்பட்டது. இந்த பூங்கா வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.,வின் முழு உருவச்சிலையை அமைத்திட வேண்டும்.
இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளுமாறு, விழுப்புரம் பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
கவுன்சிலர்கள் ஜெயப்பிரியா சக்திவேல், ஆவின் செல்வம், கோல்டு சேகர், கல்யாணசுந்தரம், கோதண்டராமன், பத்மாவதி உடனிருந்தனர்.