/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஜ வகர் சிறுவர் பள்ளியில் மாணவர் சேர்க்கை
/
ஜ வகர் சிறுவர் பள்ளியில் மாணவர் சேர்க்கை
ADDED : ஜூலை 02, 2024 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: தஞ்சாவூர் அரசு கலை பண்பாட்டு துறையின் கீழுள்ள விழுப்புரம் அரசு ஜவகர் சிறுவர் மன்றத்தின் இந்தாண்டிற்கான கலைப்பயிற்சி வகுப்பு சேர்க்கை நடக்கிறது.
இதில், குரலிசை (வாய்ப்பாட்டு), நடனம் (பரதநாட்டியம்), ஓவியம், சிலம்பம் ஆகிய நான்கு கலைகளுக்கு 5 வயது முதல் 16 வயது வரை உள்ள அனைவருக்கும் சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சி, விழுப்புரம் பழைய நீதிமன்ற சாலை அருகே உள்ள அரசு இசைப்பள்ளி வளாகத்தில் அளிக்கப்படுகிறது. இத்தகவலை தஞ்சாவூர் மண்டல உதவி இயக்குனர் மஞ்சம்மாள் தெரிவித்தார்.