/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஜான்டூயி பள்ளியில் புதிய மாணவர் குழு தலைவர் தேர்வு
/
ஜான்டூயி பள்ளியில் புதிய மாணவர் குழு தலைவர் தேர்வு
ஜான்டூயி பள்ளியில் புதிய மாணவர் குழு தலைவர் தேர்வு
ஜான்டூயி பள்ளியில் புதிய மாணவர் குழு தலைவர் தேர்வு
ADDED : ஜூலை 09, 2024 11:35 PM

விழுப்புரம் : விழுப்புரம் ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் புதிய மாணவர் குழு தலைவர் தேர்வு செய்யப்பட்டு, பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்றிடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 10ம் வகுப்பில் மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி சகானாவுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது. மேலும், பல பாடங்களில் நுாறு மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
ஆசிரியர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த், மாணவர்களை பாராட்டி, கல்வி, விளையாட்டின் முக்கியத்துவம் பற்றி கூறியதோடு, புதிய மாணவர் குழு தலைவருக்கு பொறுப்பேற்று வைத்தார். பள்ளி தாளாளர் வீரதாஸ், ஆசிரியர், மாணவர்களுக்கு பரிசு, ரொக்க பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
செயலர் ெஷர்லி வீரதாஸ், நிர்வாக அலுவலர் எமர்சன் ராபின், முதன்மை கல்வி அலுவலர் சுகன்யா ராபின், முதல்வர் ஆஸ்லி ஜோசப் கென்னடி, பொறுப்பாசிரியர் யாஸ்மின் பேகம், தலைமை ஆசிரியர் சுதா ஆகியோர் மாணவர்கள், ஆசிரியர்களை பாராட்டினர்.