/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஜான்டூயி பள்ளி சென்டம்
/
பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஜான்டூயி பள்ளி சென்டம்
ADDED : மே 12, 2024 05:49 AM

விழுப்புரம்: பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் மற்றும் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று விழுப்புரம் ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலை பள்ளி சாதித்துள்ளது.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். மாணவி சமீஹா 600க்கு 585, மாணவர் புவனேஷ்வர் 580, நவீன்ராஜன் 576 மதிப்பெண் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தனர்.
இயற்பியல் பாடத்தில் 1, கணிததத்தில் 1, கணினி அறிவியல் 3 பேர் 100க்கு100 மதிப்பெண் எடுத்துள்ளனர். 550 மதிப்பெண்ணுக்கு மேல் 11 பேர், 500க்கு மேல் 51 பேர் பெற்றுள்ளனர்.
தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த முதல்வர், பொறுப்பாசிரியர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்களை, பள்ளி தாளாளர் வீரதாஸ் பாராட்டி பரிசு வழங்கினார்.
முதன்மைச் செயலாளர் ெஷர்லி வீரதாஸ், முதன்மை முதல்வர் எமர்சன் ராபின், முதன்மை ஒருங்கிணைப்பாளர் சுகன்யா ஆகியோர் கேடயம் வழங்கி சிறப்பித்தனர்.