/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி தேசிய போட்டியில் சாதனை
/
ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி தேசிய போட்டியில் சாதனை
ADDED : மே 28, 2024 05:51 AM

விழுப்புரம், : விழுப்புரம் ஜெயேந்திர பள்ளி மாணவர்கள், தேசிய போட்டியில் சாதனை படைத்தனர்.
விழுப்புரம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மணி விழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், தேசிய அளவிலான ரக்பி போட்டியில் பங்கேற்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் நடைபெற்ற போட்டிகளில், இப்பள்ளி மாணவர்கள் அஸ்விந்தரன், ஹாதிஸ்வரன், நிஷாந்தி, ஆர்த்தி, ஷர்மிளா, தினேஷ்ராஜ் மற்றும் விக்னேஷ் குமார் கலந்து கொண்டு, வெற்றி பெற்றனர்.
தேசிய அளவிலான சாதனை படைத்த மாணவர்கள் குழுவினர், விழுப்புரம் கலெக்டர் பழனியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பள்ளி நிர்வாக இயக்குனர் குபேர் என்கிற ராஜேஷ், செயலாளர் ஜனார்த்தனன், பள்ளி உடற்கல்வி இயக்குனர் தமிழ்மணி மற்றும் பள்ளி முதல்வர்கள் உடனிருந்தனர்.