/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இ.எஸ்., கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்
/
இ.எஸ்., கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்
ADDED : மார் 12, 2025 10:03 PM

விழுப்புரம்; விழுப்புரம் இ.எஸ்., பாலிடெக்னிக் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
முகாமை எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை தலைவர் தினேஷ் துவக்கி வைத்தார். இதில் பங்கேற்ற பிரேக் டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் சென்னை, மனித வள மேம்பாட்டு மூத்த அதிகாரி பெரியசாமி, ஜெயசுதா ஆகியோர் தங்கள் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் பல்வேறு உற்பத்தி பொருட்கள் உள் மற்றும் வெளிநாடுகளில் முன்னணி ஆட்டோமொபைல் வாகனங்களுக்கு விநியோகிக்கப்படுவதை பற்றி விளக்கினர்.
தொடர்ந்து நடந்த நேர்காணலில் கல்லுாரி இறுதியாண்டு பயிலும் இயந்திரவியல் துறை எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கணினி துறையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
முகாமில், தேர்வாகிய மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. வேலை வாய்ப்பு அலுவலர் ஜீவநாதன் உட்பட துறை தலைவர்கள், ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.