ADDED : மார் 09, 2025 04:59 AM

அ நிறம் | அளவு
திண்டிவனம் : முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாளை முன்னிட்டு, வைரபுரத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஒலக்கூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், நடந்த விழாவிற்கு, ஒலக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் சண்முகம் 1,200 பேருக்கு தையல் மிஷின், இஸ்திரி பெட்டி, காஸ் ஸ்டவ், குக்கர், புடவை உள்ளிட்டவைகளை வழங்கி பேசினார்.
விழாவில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
