/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காணை தெற்கு ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
/
காணை தெற்கு ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
காணை தெற்கு ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
காணை தெற்கு ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
ADDED : ஆக 30, 2024 12:08 AM

விழுப்புரம்: காணையில், தெற்கு ஒன்றிய தி.மு.க., செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்துது.
கூட்டத்திற்கு, ஒன்றிய அவைத்தலைவர் பழனி தலைமை தாங்கினார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், காணை ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி, மாவட்ட துணைச் செயலாளர் இளந்திரையன் முன்னிலை வகித்தனர்.
விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா சிறப்புரையாற்றினார். ஒன்றிய செயலாளர் ராஜா தீர்மானங்களை விளக்கி பேசினார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு பிறந்தநாள் விழாவை கிராமங்களில் கிளைகள் தோறும் நடத்துவது. சென்னையில் நடைபெறும் தி.மு.க., முப்பெரும் விழாவில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்வது., ஊராட்சிகள் தோறும் தெருமுனை பிரசாரம் செய்வது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, தேர்தலில் ஓட்டுகள் பெற்று தந்த, காணை தெற்கு ஒன்றிய நிர்வாகிகளுக்கு, எம்.எல்.ஏ., பாராட்டு தெரிவித்தார். ஒன்றியத்தில் அதிக ஓட்டுகள் பெற்ற வீரமூர், டட் நகர், கருங்காலிப்பட்டு கிளை கழகத்திற்கு, ஒன்றிய செயலாளர் ராஜா, ரொக்கப்பரிசளித்து பாராட்டினார்.
மகளிரணி நிர்வாகி தேன்மொழி, பொதுக்குழு உறுப்பினர் ஏழுமலை, மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், ஒன்றிய துணைச் சேர்மன் வீரராகவன், ஒன்றிய நிர்வாகிகள் செல்வம், செல்வராஜ், மதன், கருணாகரன், சிவக்குமார், புனிதா அய்யனார், ஒன்றிய இளைஞர் அணி குமரன், மாவட்ட மாணவரணி அரங்கநாதன், மருத்துவர் அணி சபரி, சுற்றுச்சூழல் அணி அகிலன், ஒன்றிய நிர்வாகிகள் சக்கரவர்த்தி, நாராயணசாமி சிவராமன், ஏரப்பன், தகவல் தொழில்நுட்ப அணி கதிரவன், ராகுல் உட்பட பலர் பங்கேற்றனர்.