ADDED : ஜூலை 04, 2024 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சித்தகிரி முருகன் லயன்ஸ் சங்கம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சங்க தலைவர் மாது தலைமை தாங்கினார். செயலாளர் யாரப்பேக் வரவேற்றார்.
பொருளாளர் மணிகண்டன், சத்தியமூர்த்தி, சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் செல்வம், ஒன்றிய கவுன்சிலர் ஷாகின்அர்ஷத் ஆகியோர் மாணவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.
ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் பாலசுப்ரமணி கபசுர குடிநீரின் பயன் குறித்து பேசினார்.
சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.